மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் கோதாவரி ஆற்றின் கீழ் உள்ள பல்வேறு கோயில்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாசிக்கில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை, புனே, ராய்காட் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாசிக்கில் கொட்டித் தீர்த்த கனமழையால் கங்காபூர் அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் கோதாவரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையில் உள்ள பல கோயில்கள் தண்ணீரில் மூழ்கின.
ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.