புதுச்சேரியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் மதுரையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டியாளர் பாளையத்தை சேர்ந்த முகேஷ்குமார் , புதுச்சேரி மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். முதலாம் ஆண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், முகேஷ்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
20 நாட்களுக்கு முன்பு முகேஷ்குமார் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள விடுதியில் முகேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.