தென்காசி அருகேஅரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவிகள் தேவி சங்கரி, ஹர்னிகா மற்றும் சந்தான முத்துமாரி ஆகியோர் 118 நவீன தனிம வரிசை அட்டவணையை 3 நிமிடங்கள் 25 வினாடிகளில் வரிசைப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவிகள் மூவருக்கும் சாதனை புரிந்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சாதனை மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.