திமுக தமிழ் மொழியை வளர்க்க பாடுபடவில்லை, கனிமொழியை மட்டுமே வளர்க்க பாடுபட்டு இருக்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் விளக்காக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாறில் நடைபெற்றது.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். கராத்தே தியாகராஜன் எஸ்.ஜி. சூரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கு பெற்றனர்
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்
ஐந்தரை ஆண்டுகள் நான் மாநில தலைவராக இருந்துள்ளேன் கட்சி பலவீனமாக இருந்த பொழுது கூட இங்கு தான் வேட்பாளராக போட்டியிட்டேன் தமிழகத்தின் கவலையாக இருக்கக்கூடியவர்கள் காவல்துறை நண்பர்கள் தான் நான் ஒருவரிடம் பேசும் பொழுது ஒரு அதிகாரிக்கு டிரான்ஸ்பர் வந்ததாகவும் அவர் அங்கு செல்ல மறுத்ததாகவும் ஏனென்று கௌரவ கேட்ட பின்பு தான் அவர் அங்கு கொலை கொள்ளை அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
யார் அந்த அதிகாரி என்று பார்த்தால் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி இந்த அளவில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் தமிழகத்தில் சட்டமன்ற நிலை எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாஜக தொண்டர்கள் அனைவரும் நல்லவர்கள் வல்லவர்கள் என்று புகழாரம் கூட்டினார்.
நிதி பகிர்வின் அதிக பயன்பெறப் போவது தமிழ்நாடு மட்டுமே தமிழ்நாடு எங்கள் உயிரில் உடம்பில் மூச்சில் என்று என எல்லாவற்றிலும் உள்ளது.
திமுக தமிழ் மொழியை வளர்க்க பாடுபடவில்லை கனிமொழியை வளர்க்க மட்டுமே பாடுபட்டார்கள்.
நான் தென் மாவட்டத்தில் பிறந்தவன் தென் மாவட்டத்தில் வளர்ந்தவள் ஆனால் கனிமொழி சென்னையில் பிறந்தவர்கள் சென்னையில் வளர்ந்தவர் ஆனால் அவர் ஏன் தென் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் அதுவும் தூத்துக்குடியில் ஏன் போட்டியிட வேண்டும் ஜாதி பாசம் காரணமாகவே போட்டியிடுகிறார் என்று மறைமுகமாக சாடினார்.
இதை தொடர்ந்து பேசிய தமிழிசை நான் வாரிசு தான் வாரிசு இல்லாத வாரிசு என்றும் நான் சாதாரண தொண்டராக இருந்து இந்த கட்சியில் மாநில தலைவராக உயரம் அளவிற்கு வளர்ந்துள்ளேன் இது பாஜகவில் மட்டுமே நடக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு தொண்டனால் திமுக தலைவர் பதவியை அடைய முடியுமா பாஜகவில் இங்கு அமர்ந்திருக்க கூடிய தொண்டர்கள் கூட நாளை மாநில தலைவராக வரக்கூடிய கட்சி தான் பாஜக.
வேங்கை வயலில் நலமாக தண்ணீர் குடித்த மக்கள் தற்பொழுது மலமாக தண்ணீர் குடித்தார்கள் இதை கண்டுபிடிக்க முடியவில்லை இதில் என்ன இருக்கிறது சட்டம் ஒழுங்கு.
தற்பொழுது வரும்பொழுது கூட டிவியில் ஒரு செய்தியை பார்த்தேன் அதில் கல்லூரி மாணவர்கள் ஒருவர் காவிரி நீர் பிடிப்பை பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது கஞ்சா குடித்துவிட்டு அந்த வழியாக வந்த இரண்டு நபர்கள் அந்த மாணவரை அடித்து கொலை செய்கிறார்கள் வடசென்னையில் எந்த கடையில் கேட்டாலும் கஞ்சா மிக சுலபமாக கிடைப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
மின்சார கட்டணத்தை இயற்றியது யார் மாதம் மாதம் கணக்கெடுப்பு என்ன ஆயிற்று என்று போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
ஆயிரம் கோயிலில் குடம் முழுக்க நடத்துவதாக சொல்லும் முக ஸ்டாலின் அவர்களே ஒரு கோயிலில் குடம் எடுத்து வரலாமே ஏன் வரவில்லை?
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை இந்து மக்கள் ஓட்டு போட்டு தான் முதல்வர் ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார்.
வேளச்சேரி ஏரி 220 ஏக்கர் இருந்தது தற்போது வெறும் 70 ஏக்கர் மட்டுமே இருக்கிறது இதனால் தான் வெள்ளம் வரும் பொழுது பெருக்கெடுத்து ஓடுகிறது இதற்கெல்லாம் யார் காரணம் யார் இதற்கு முன்பு ஆட்சி செய்தது?.
தன்னுடைய தொகுதியில் என்ன இருக்கிறது என தெரியாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தான் .
ஏற்கனவே ஒரு கூட்டத்தில் ராகுல் காந்தி ஏன் செல்லவில்லை பயான் நாட்டிற்கு என்று நான் கேள்வி எழுப்பினேன். அங்கே பாஜக தொண்டர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர் சேட்டில் கூட இறங்க மாட்டார்.
40க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள் பயணத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுவதை பார்த்தால் இப்பொழுது தான் பேசுவது போல பேசுகிறார் நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி என்ன பேசப்போகிறார்கள் என நாடே எதிர்பார்த்து இருக்கிறது.
முத்துரா வங்கி கடன் வாங்கியவர்கள் அதிகமானவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் எல்லாவற்றிற்கும் தமிழகத்தில் பங்கு இருக்கிறது ஏன் நிதி ஆயோ கூட்டத்திற்கு செல்லவில்லை போகாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
வேளச்சேரி பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது சென்னை வெள்ளத்தின் போது போட்டியில் வந்தோம் இதற்கு காரணம் இன்றைய ஆட்சியாளர்கள் தான்
ஒருவர் வங்கிக்கு சென்று எனக்கு கடன் வேண்டும் என்று போட்டு வாங்குவதற்கு கடன் கேட்டதாக ஒரு கதையும் கூறினார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தான் வெற்றி பெறுவார் என்றும் டெல்லி கோட்டை நம் கையில் உள்ளது போல ஜார்ஜ் கோட்டையை நம் கைக்கு வரவேண்டும் என்று தொண்டர்கள் இடையே சூலூரைத்தார்.
இந்தியா முழுவதும் விமான நிலையங்கள் உள்ளது சென்னை விமான நிலையம் உலக தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது ஏதாவது இடிந்து விழுந்தால் அது காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக தற்போது தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஆளுநர் பதவி பெரிதல்ல பாஜகவை ஆள வைப்பது தான் என்னுடைய பெரிய பதவி என்றும் தெரிவித்தார்.