பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் களம் இறங்கம் போட்டிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மதியம் 3.25 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான 400 ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கிரன் பாஹல் பங்கேற்கிறார்.
மதியம் 3.45 மணிக்கு தொடங்கும் மகளிருக்கான பாய்மரப்படகு போட்டியில் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் களமிறங்குகிறார்.
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் களம் காண்கிறார்.
மாலை 6.10 மணிக்கு நடைபெறும் ஆடவர் பாய்மரப்படகு போட்டியின் ரேஸ் 9 மற்றும் 10-ல் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் போட்டியிடுகிறார்.
இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான தகுதி சுற்று நடைபெறுகிறது. இதில் அனந்த்ஜீத் சிங், மகேஷ்வரி சவுகான் பங்கேற்கின்றனர்.
மாலை 6.30 மணிக்கு மகளிருக்கான மல்யுத்த போட்டியின் ஃப்ரீஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெறுகிறது. இதில் வீராங்கனை நிஷா பங்கேற்கிறார்
இதில் வீராங்கனை நிஷா தகுதி பெற்றால் மாலை 7.50 மணிக்கு நடைபெறும் அடுத்த சுற்றான மல்யுத்தப் போட்டியின் கால் இறுதி சுற்றில் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10.34 மணியளவில் நடைபெறும் ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் தடையோட்டத்தின் முதல் சுற்றில் வீரர் அவினாஷ் சாப்லே களம் காண்கிறார்.