கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட வவ்வால் மாதிரிகளில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 21ஆம் தேதி நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்த அந்த பகுதியில் காணப்பட்ட வவ்வால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் சேகரிக்கப்பட்ட வவ்வால் மாதிரிகளில் நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாண்டிக்காட்டில் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 27 பழ வவ்வால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 6 வல்வால் மாதிரிகளில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.