ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.
ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நோக்கமாக கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களால் ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியின் ஈடுபட்டுள்ளனர்.