குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஃபிஜி தீவுகள், நியூஸிலாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையொட்டி, டெல்லி விமான நிலையத்திலிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் மூலம் ஃபிஜி தீவுகள், நியூஸிலாந்து, திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகள் உடனான இந்தியாவின் பரஸ்பர நட்புறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 10-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு டெல்லி திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.