பீகாரில் டிராக்டர் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் 9 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பீகார் புறப்பட்டனர். ஹாஜிபூர் அருகே சென்றபோது பக்தர்கள் சென்ற டிராக்டர் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியுள்ளது.
இதில், வாகனத்தில் பயணம் செய்த பக்தர்களில் 9 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பக்தர்கள் சென்ற வாகனம் மிக உயரமாக இருந்ததால் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.