ஆடி அமாவாசையையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் கடந்த 22ஆம் தேதி ஆடி திருவிழா கால்நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடைபெற்ற நிலையில், ஆடி அமாவாசை தினத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து இரவு நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.