எம்பிசி இட ஒதுக்கீடு சம்பந்தமாக 1989 ஆண்டு முதல் இப்போது வரையிலான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு அதிகளவில் கொடுக்கபடுவதாக தகவல் அறியும் உரிமை சட்ட பதில் அறிக்கையில் தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் வழக்கறிஞர் பாலுவும் இருந்தார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ்,
20% எம்பிசி இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனை திமுக அரசு வழங்கி இருக்கிறது. இதனை ஊடகங்கள் யாரிடமும் கேட்டு தெளிவுபடுத்தவில்லை. அதிலும் ஒரு ஊடகம் vanniyar enjoys reservation என குறிப்பிட்டு இருக்கிறது.
பட்டியலின, வன்னியர் சமுதாயம் சேர்ந்து தமிழகத்தில் 40 சதவிகித மக்கள் தொகையை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இவை இரண்டும் தான் பெரிய சமுதாயம். தமிழ்நாடு முன்னேற இவர்களுக்கு இடஒதுக்கீடு தேவை.
இடஒதுக்கீடு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக நாங்கள் பல முறை அரசிடம் புள்ளி விவரங்களை கேட்டோம். கல்வியில், வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு எத்தனை சதவீதம் கொடுத்துள்ளது என கேட்டிருக்கிறோம் ஆனால் அப்போதெல்லாம் தரவுகளை சேகரிப்பதாகவும் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் அரசு தரப்படுமிருந்து பதில் வந்து கொண்டிருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கோரப்படும் தகவலுக்கு ஒரு மாதத்திற்குள் பதில் கொடுக்க வேண்டும். ஆனால் வன்னியர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக 10 ஆண்டுக்கு முன்பு கோரப்பட்ட மனுவிற்கு தற்போதுதான் பதில் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பிட்டு சில தரவுகள் மட்டுமே வெளியாகி இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என அனைத்து தேர்வுகளின் தரவுகளையும் நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அரசு தொடர்ந்து குரூப்-4 குறித்தான தரவுகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. குரூப் 1 மற்றும் குரூப் 2 அதற்கான தரவுகளை தமிழக அரசு கொடுப்பதில்லை.
1989 இல் 107 சமுதாயங்கள் தான் MBC இல் இருந்தது. ஆனால் இப்போது எம்பிசி பிரிவில் 115 சமூகத்தினர் இருக்கிறார்கள். எம்பிசி பிரிவில் வன்னியர்கள் மட்டுமல்லாது இருக்கும் 115 சமூகத்தின் தரவுகளையும் நாங்கள் கேட்டு வருகிறோம்.
இந்த 115 பிரிவில் 30க்கும் அதிகமான சமூகத்தினருக்கு அரசு வேலையே கிடைப்பதில்லை. அதில் 114 சமுதாயங்கள் தமிழக மக்கள் தொகையில் 6.7% மக்கள் தொகையில் உள்ளது. எம்பிசியில் சில சமூகத்தினர் மட்டும் அனைத்து வேலைகளையும் தட்டிக் கொண்டு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 109 உயர் காவல்துறை அதிகாரிகளில் ஐஜி அளவில் ஒரே ஒருவர் மட்டுமே வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்கிறார்.
சமூக நீதிக்கு எதிரான மிகப் பெரிய வன்மமான செயலை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் 16 டி ஜிபி, 29 டி ஐ ஜி மொத்தம் 109 உயர் காவல் துரை அதிகரிகளில் ஐ ஜி அளவில் ஒருவர் மட்டும் தான் உள்ளார். இதுவா சமூக நீதி
1989 முதல் எம்பிசி என்கிற பிரிவு உருவாக்கப்பட்டது அப்போது முதல் இப்போது வரையிலான எம்பிசி தொடர்பான இட ஒதுக்கீடு சம்பந்தமான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் வன்னியர் சமூகத்தில் இருந்து ஒருவர் ஐஏஎஸ் பதவி வரை உயர்ந்து இருக்கிறார். அனைத்து சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க செய்ய வேண்டியது முதல்வரின் பொறுப்பு.. முதல்வரும், அமைச்சர்களும் பொய்யான தகவல்களை பரப்பும் கேடுகெட்ட செயல்களை நிறுத்த வேண்டும்.. கலைஞர் சமூக நீதிக்காக பல விஷயங்களை செய்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக கீழ் தரமான செயலை செய்கிறார்.
கட்சிக்குள் இருக்கும் பிரச்சனை தான் இது.. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் . சட்டமன்ற தேர்தலில் 131 பேரில் 21 வன்னியர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களுள் மூன்று பேருக்கே அமைச்சர் பதவி கிடைத்தது.
முக்குலத்தோர், தேவர் சமூகத்தில் 5 அமைச்சர்கள், வெள்ளாள கவுண்டர் சமுகத்தில் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்று பேருக்கு அமைச்சர் பதவி. இப்படி நாடாரில் ஏழு பேரில் மூன்று பேருக்கும், முதலியாரில் 10ல் மூன்று பேருக்கும் ரெட்டியார் சமூகத்தில் இரண்டு அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
பட்டியலின மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த 34 பேர் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் ஆறு பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பட்டியல் என சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பெரிய இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.
பட்டியலின மக்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்காதா ?? திமுகவிற்கு சமூக நீதிக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லை.. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் நியாயமான பிரதிநிதி வேண்டும். அதிகமாக கேட்கவில்லை.. வன்னியர் மட்டுமல்ல மற்ற சமூகமும் வளர வேண்டும். இதுவே எங்களது கோரிக்கை..
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்வரை இட ஒதுக்கீடு சம்பந்தமாக பலமுறை சந்தித்திருக்கிறோம். அப்போதெல்லாம் தரவுகளை சேகரிப்பதாக சொல்லி வந்தவர்கள் பத்து மாதங்களுக்கு முன்பு பதிவிடப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு இப்போது பதில் கொடுத்திருக்கிறார்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தரவுகள் வெளியாகிறது ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அமைப்பு தரவுகளை கேட்டால் தரவுகளை தர மறுக்கிறது..
6.7% மக்கள் தொகை கொண்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 14 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கிறது. இதுதான் சமூக நீதியா ?? மக்கள் கணக்கெடுப்பு எடுப்பதற்கு இவர்களுக்கு பயம் வந்துவிட்டது.
பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தைரியமாக கணக்கெடுப்பை எடுத்திருக்கிறார். இந்த கணக்கெடுப்பை எந்த நீதிமன்றமும் தடை செய்யவில்லை. ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா ஒடிசா ஜார்கண்ட் என பல மாநிலங்களில் கணக்கெடுப்பு எடுக்கிறார்கள். முதலமைச்சர் இதற்கு அதிகாரம் இல்லை என்கிறார். பஞ்சாயத்து தலைவருக்கே கணக்கெடுப்பு எடுப்பதற்கு அதிகாரம் இருக்கிறது.
திமுகவுக்கும் முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை.. திமுகவின் 23 வன்னிய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக சமீபத்தில் வெளியான தரவுகளுக்கு முதல்வர் தான் பொறுப்பு.
அருந்ததியினருக்கு ஆறு விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என கலைஞரிடம் கோரிக்கை வைத்தோம். போராட்டம் நடத்துவோம் என ராமதாஸ் கூறியபோது போராட்டம் வேண்டாம் என அருந்ததி மக்களுக்கு உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தினார் கலைஞர்.
3.44 சதவிகிதம் DNC பிரிவினர் இருக்கிறார்கள். மக்கள் தொகை எண்ணிக்கையை விட இரு மடங்கு இட ஒதுக்கீட்டை இவர்கள் பெற்று வருகிறார்கள். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதே பாமகவின் நோக்கம்.. அடிமட்டத்தில் இருக்கும் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு கொடுத்து அவர்களை முன்னேற்றி சாதியை ஒழிக்க வேண்டும்.. தமிழக அரசு வாக்குகளுக்காக வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றியுள்ளது.
முதல்வரின் சுயநலத்தினால் தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீடு ஆபத்தில் இருக்கிறது என்றார்.