குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளை கயிறுகட்டி போலீஸார் மீட்டனர். நவ்சாரி மாவட்டம் வாங்கன் கிராமத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பயணிகள், மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதையறிந்த வன்ஸ்டா போலீஸார், வெள்ளப்பெருக்கையும் பொருட்படுத்தாமல் கயிறுகட்டி சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.