மயிலாடுதுறையில் இருசக்கர மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் தொடங்கிய பேரணியானது காந்திஜி சாலை, ஸ்டேட் பேங்க் சாலை, கச்சேரி சாலை வழியாக சென்று கேணிக்கரை பகுதியில் நிறைவடைந்தது.
இதில், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமாேனோர் ஹெல்மெட் அணிந்தும், பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.