“குடிநீரைக் கூட தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது” என சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வெளியேற்று வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தர ஆணை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பாேது, செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தரராஜன், “தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம் என திமுக வாக்குறுதி அளித்து மூன்று ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றவில்லை” என தெரிவித்தார்.