டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை கெஜ்ரிவால் அணுகலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்து அவரை திகார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.