ஒடிசா பாஜக எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதில், ஒடிசாவிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது ஒவ்வொரு எம்.பி.க்களும் எத்தனை முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்தும், அவர்களது தொகுதிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.