கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில், சிலம்பாட்டம், சுருள், வாள் வீச்சு மற்றும் களரி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிபடுத்தினர். சிலம்பாட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.