ஜெயம் ரவியின் மிருதன் 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் முதன் முதலில் ஜாம்பி கதையை வைத்து வெளியான படம், ‘மிருதன்’.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 8 ஆண்டுகள் கழித்து, மிருதன் படத்தின் 2-ம் பாகம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.