அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!
Sep 20, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்ட சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 4000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் ஒரு பல்கலைகழக வளாகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் பேசிக்கொண்டிருந்த போது இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. சார்லி கிர்க் கொல்லப்பட்டது ஏன் ? கொலையாளி யார்? என்பது பற்றி இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

MAKE AMERICA GREAT AGAIN என்ற செயல் திட்டத்தின் முக்கிய முகமாக விளங்கிய 31 வயதான சார்லி கிர்க், அதிபர் ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வந்தார்.

தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்கக் கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட Turning Point USA அமைப்பின் நிர்வாக இயக்குனரான சார்லி கிர்க், தீவிரப் பழமைவாத கொள்கையுடையவர்.

சுமார் 850 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பு தொடர்ச்சியாக மாணவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சிறந்த பாட்காஸ்டரான சார்லி கிர்க்கை X-ல் 5.2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் பின்தொடர்கிறார்கள். இதை விட அதிகமாக டிக்-டாக்-கில் 7.3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் சார்லி கிர்க்-கைப் பின்தொடர்கிறார்கள்.

அமெரிக்கா மட்டுமின்றிச் சர்வதேச அளவிலும் குறிப்பிடத் தக்கச் சமூக ஊடக ஆளுமையாக வழங்கிய சார்லி கிரிக், சமீபத்தில் ‘American Comeback Tour’,என்ற நிகழ்ச்சியை தொடங்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். 15 நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்ச்சி,கடந்த புதன் கிழமை, Utah Valley பல்கலைக்கழகத்தில் நடைப் பெற்றது.

சார்லி கிர்க் நிகழ்ச்சியில் புகழ்ப்பெற்ற “Prove Me Wrong” என்ற பகுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனைத் திருநங்கைகள் அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் ? என்ற கேள்வி சார்லி கிர்க்-கிடம் வைக்கப்பட்டது. சுமார் 4000 பார்வையாளர்களின் கைத் தட்டலுக்கு இடையே, அதிகமானவர்கள் என்று அவர் பதில் அளித்தார்.

ஏதோ சத்தம் கேட்க, தனது கழுத்தைத் தடவிய சார்லி கிர்க்,இரத்தம் வடிந்த நிலையில் சேரில் இருந்து கீழே சரிந்தார். அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்றனர். என்ன நடக்கிறது என்று புரியாமல்,கூச்சலும் குழப்பமும் நிலவியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பதறிய படியே ஓடத் தொடங்கினர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது.

பழமைவாத செயல்பாட்டாளரான சார்லி கிர்க் ஒரு ஒற்றை தோட்டாவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும், தொலைவில் இருந்து நூலகக் கட்டிடத்தின் மேலிருந்து சுடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கருப்பு நிற உடை அணிந்த, கருப்பு முகமூடியுடன் ஒருவர், நீண்ட கருப்பு துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சார்லி கிர்கை கொன்ற நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, FBI இயக்குனர்க்  காஷ் படேல் கூறியுள்ளார்.

பழமைவாத மதிப்புகளுக்காகப் போராடிய “தியாகி” என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சுதந்திரம், ஜனநாயகம், நீதி மற்றும் அமெரிக்க மக்களுக்காகச் சார்லி கிர்ப் போராடினார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

கிர்க்-க்கு மரியாதை  செலுத்தும் வகையில் அமெரிக்கக் கொடி வரும் 14ஆம் தேதி வரை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டுஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது இரண்டு கொலை முயற்சி தாக்குதல்கள் நடந்தது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில் அரசியல் நோக்கங்களுக்காகப் படுகொலைகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tags: americausaAn incident that shocked America: Trump's friend shot dead in a single gunshot
Share
Tweet
SendShare
Previous Post

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

Next Post

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies