உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? - நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!
Oct 17, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செவ்வாய் கிரகத்தில் பில்லியன் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதியானவையா? என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மார்ஸ் ரோவரை விண்ணுக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தின் புவியியல் அம்சங்களை ஆராய்ந்து தரவுகளைச் சேகரித்துப் பூமிக்கு அனுப்பி வரும் மார்ஸ் ரோவர் விண்கலம், தற்போது பிரமிக்க வைக்கும் தகவலை  பூமிக்கு அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதை கண்டறிந்துள்ள விண்கலம், அது குறித்து சமிஞ்ஞைகளை  பூமிக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை நேரடியாகக் கண்டறியும் அளவுக்கு திறன் படைத்தது இல்லை மார்ஸ் ரோவர் விண்கலம் . மாறாக, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்ட இடங்களில் பாறைகளை ஊருடுவி, பின்னர் அது குறித்த தரவுகளைப் பூமிக்கு அனுப்பும் திறன்பெற்றுள்ளது. மாதிரிகளையும் சேகரித்து வருகிறது

அந்த வகையில் தான், வறண்ட நதி கால்வாயில் பாறைகள் இருப்பதாக மார்ஸ் ரோவர்  தகவல் அனுப்பியுள்ளது. இதன்மூலம் மட்டுமே, உயிரினங்கள் வாழத் தகுதியான கிரகம் செவ்வாய் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மார்ஸ் ரோவர் விண்கலம் இதுவரை 25 மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளது. மொத்தம் 30 மாதிரிகளை  சேமிக்கும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகம் தொடர்பான மேலும் பல விவரங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

2030-ம் ஆண்டில் தான் விண்கலம் பூமிக்குத் திரும்பும் எனக் கூறப்படும் நிலையில், அதுவரைச் செவ்வாய் கிரகம் தொடர்பான நேரடி மாதிரிகள் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

அப்படி, நேரடியாக மாதிரிகள் கைக்குக் கிடைக்கும்போது, அண்டார்டிக்காவில் நுண்ணுயிரிகள் வாழ்வது எப்படி உறுதி செய்யப்பட்டதோ ? அதே போன்றதொரு சோதனையை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய முடியும்.

எப்படி என்று கேட்கிறீர்களா, பொதுவாக SULFATE MINERAL-களை SULPHIDE – ஆக மாற்றும் குணம் கொண்டது நுண்ணுயிரிகள். மார்ஸ் ரோவர் விண்கலம் கொண்டு வரும் மாதிரிகளிலும் அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தால், செவ்வாய் கிரகமும் உயிரினங்கள் வாழத் தகுதியானது என்று உறுதியாகக் கூறலாம்.

Tags: Is Mars habitable? - NASA's Mars Rover's amazing discoveryசெவ்வாய் கிரகம்செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதியானவையா?
Share
Tweet
SendShare
Previous Post

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies