திண்டுக்கல்லில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.