சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பள்ளி மாணவர்களின் கனவை சிதைத்து விட வேண்டாம்! - அண்ணாமலை
Mar 20, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பள்ளி மாணவர்களின் கனவை சிதைத்து விட வேண்டாம்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 6, 2024, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செலவைக் குறைக்கிறோம் என்ற பெயரில், விளையாட்டுத் துறையின் நோக்கத்தையே சீர்குலைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது எனப் பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

2024 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவை, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்திருக்கிறார்.

அதில், பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பை, 12 முதல் 19 வயது வரை ஒரே பிரிவில் வைத்திருக்கிறார்கள். இது, தேசிய விளையாட்டு கூட்டமைப்பு வகுத்துள்ள வயது வரம்பு பிரிவுகளான, 11 – 14 வயது, 14 – 17 வயது, 17 – 19 வயது என்பதற்கு முற்றிலும் எதிரானது மட்டுமின்றி, 12 வயது பள்ளிச் சிறுவனை, 19 வயது சிறுவனோடு ஒரே பிரிவில் போட்டியிட வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்பது, முட்டாள்தனமும் கூட.

இதனால், ஒத்த வயது போட்டியாளர்களோடு போட்டியிடும் சமவாய்ப்பின்றி இளஞ்சிறுவர்கள் ஏமாற்றமடைவதோடு, இளம் வயதிலேயே மனதளவில் தளரவும் வாய்ப்பு உள்ளது. இது விளையாட்டுத் துறையில் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

பள்ளி மாணவர்களை, வயது வரம்பின் அடிப்படையில் மூன்று பிரிவாக வகைப்படுத்துவதை விட்டுவிட்டு, 12 – 19 வயது வரை ஒரே பிரிவாக அறிவித்திருப்பது, உண்மையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு, தனது துறை குறித்த புரிதலோ, இந்த விளையாட்டுப் போட்டிகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்ற தெளிவோ இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

செலவைக் குறைக்கிறோம் என்ற பெயரில், விளையாட்டுத் துறையின் நோக்கத்தையே சீர்குலைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

உடனடியாக, திமுக அரசு அறிவித்திருக்கும், பள்ளி மாணவர்கள் 12 – 19 வயது வரை ஒரே பிரிவு என்ற அறிவிப்பை மாற்றி, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு வகுத்திருக்கும் அடிப்படையான விதிமுறையின்படி, தமிழக முதலமைச்சர் கோப்பை 2024 பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், விளையாட்டுத் துறையில் சாதிக்கும் திறமையும் ஆர்வமும் கொண்ட பள்ளி மாணவர்கள் கனவினை, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சிதைத்து விட வேண்டாம் என்றும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Do not destroy the dreams of school students in the name of austerity! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி!

Next Post

கனமழையால் மரம் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதம்!

Related News

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies