மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, தென்னிந்திய பார்வர்டு பிளாக் சார்பில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் சபரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது, தேர்தல் வாக்குறுதியில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.