தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் நகராட்சி ஊழியர் வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்துக்கல்வலசையைச் சேர்ந்த துப்புரவு ஆய்வாளர் மாதவராஜ் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல் மேலும் இரு வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.