சிறையில் உள்ள நண்பனை சந்திப்பதற்காக கார் மீது பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லத்தம்மன் கோயில் தெருவில் நிறுத்தப்படிருந்த காரை சிவக்குமார் என்பவர் கல் மூலம் சேதப்படுத்தியுள்ளார்.
மேலும் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறையில் உள்ள தனது நண்பர் தினேஷை சந்திப்பதற்காக கார் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.