ஊழல் வழக்கில் சிறையில் உள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியாவை விடுவிக்க அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேச முன்னாள் பிரதமரும், முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான பேகம் கலீதா ஜியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் மாளிகையில் ராணுவ தளபதி வகார் உஜ் ஜமானுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.