பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாலை 3 மணிக்கு மகளிருக்கான மல்யுத்தப்போட்டி நடைபெறுகிறது, 50 கிலோ எடைப்பிரிவுக்கான சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் பங்கேற்கிறார்.
மாலை 3.20 மணிக்கு நடைபெறும் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் குரூப்-பி தகுதி சுற்றில் இந்திய முன்னணி வீரர் நீர்ஜ் சோப்ரா களம்காண்கிறார்.
இதனையடுத்து மாலை 6.13 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான பாய்மரப் படகு போட்டியில் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் பங்கேற்கிறார்.
மாலை 7.13 மணிக்கு ஆடவருக்கான பாய்மாரப் படகு போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் போட்டியிடுகிறார்.
இறுதியாக இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ஆடவருக்கான ஹாக்கிப்போட்டியின் அரையிறுதி சுற்று நடைபெறுகிறது. இதில் இந்தியா – ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.