கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பிரியாணி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மகாலிங்கபுரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இளைஞர் ஒருவர் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் காங்கேயத்தில் பிரியாணி கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வரும் மணிகண்டன் என்பது தெரிய வந்தது.
இது குறித்துமாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.