ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் இஸ்மாயில் ஹனியே, கடந்த மாதம் 31-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவரை ஆயுதக்குழு அறிவித்துள்ளது.
அதில் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த யாஹ்யா சின்வார் என்பவர் இனி ஒட்டு மொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.