விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதன்படி முதல் திருநாளன்று 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனியும், 5 ஆம் திருநாளில் ஐந்து கருட சேவையும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 9-ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியாக ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.