ஆர்எஸ்எஸ், தேசத்தை நேசிக்கும் இயக்கம் என பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர்,
காங்கிரஸ் ஆட்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை இரண்டு முறை தடை செய்ய முயற்சி நடைபெற்றதாக கூறினார். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தேசத்தை நேசித்ததால் ஆர்எஸ்எஸ் வலுவடைந்ததாக கூறிய ஜெ.பி. நட்டா, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தாய்நாட்டுக்கு முழு பலத்துடன் பாஜக சேவையாற்றி வருவதாக தெரிவித்தார். அரசியலமைப்பு சட்ட முகவுரை பாதுகாக்கப்படும் என்றும் நட்டா குறிப்பிட்டார்.