ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா திரைப்படத்தின் பாடல்களுக்காக, இசையமைப்பாளர் அனிருத் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
கொறடாலா சிவா இயக்கிய இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘அச்சம்’ பாடல், விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற ”Badass’ பாடலைப் போன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், அத்திரைப்படத்தில் உள்ள சுத்தமல்லே பாடல், சிங்களப் பாடலான ‘மனிகே மகே ஹிதே’ என்ற பாடலின் காப்பி என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.