தனது தந்தை உயர்படிப்புக்கு உதவி செய்யாதததால் தான் நடிப்பை தேர்வு செய்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தாவிடம், அவர் திரைத்துறையை தேர்வு செய்தது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பியபோது சமந்தா இவ்வாறு பதில் அளித்தார். தனது குடும்பத்தின் சூழலைக் கொண்டே நடிப்பை தேர்வு செய்ததாகவும், தான் எப்போதும் நடிகையாக விரும்பியதில்லை என்றும் சமந்தா கூறியுள்ளார்.