இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிட உள்ளார்.
இலங்கையில் வரும் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது. அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பயின்ற அவர், 2010-ம் ஆண்டு முதல் மூன்று முறை அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.