மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பிரான்ஸின் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராகியுள்ளார்.
ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியல் படி, மார்க் ஜூக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு 175.5 பில்லியன் டாலர்களாக உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் பங்குகள் நேற்று 5 சதவீதம் உயர்ந்ததை தொடர்ந்து, மார்க் ஜுக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.