வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், டாக்காவில் உள்ள பிரபல இந்து பாடகரான ராகுல் ஆனந்தாவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் பிரபல நாட்டுப்புற பாடகரான ராகுல் ஆனந்தா, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை தொகுத்ததற்காக பிரபலமானவர் ஆவார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு வருகை தந்தபோது ராகுல் ஆனந்தாவின் வீட்டிற்கு வருகை தந்தார்.
கலவரக்காரர்கள் 140 ஆண்டுகள் பழமையான ராகுல் ஆனந்தாவின் வீட்டிற்கு தீ வைத்ததோடு அவரது இசைக்கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் ராகுல் ஆனந்தா தனது மனைவி மற்றும் மகனுடன் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.