புதுச்சேரியில் ரவுடியை பிடிக்க சென்ற காவலர் மீது ரவுடி நடத்திய கொலைவெறி தாக்குதலில் காவலர் படுகாயமடைந்தார்.
தருமபுரியை சேர்ந்த வசந்த், புதுச்சேரி காவல்துறையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அம்மா நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சதீஷை, வழக்கு விசாரணை தொடர்பாக காவல்நிலையம் வருமாறு வசந்த் அழைத்துள்ளார்.
ஆனால் சதீஷ் செல்ல மறுத்ததுடன் தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து வசந்தை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த வசந்த் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.