ஆந்திரபிரதேசத்தில் ரயிலில் பயணித்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை சக பயணிகள் தர்ம அடி கொடுத்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டிணம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் மாணவி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மாணவி சத்தம் போட்ட நிலையில், அந்நபருக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.