லண்டனில் உள்ள டவர் பாலம் வழியாக வந்த இந்திய போர்க்கப்பலை வரவேற்கும் வகையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டனில் புகழ்பெற்றுள்ள டவர் சின்னம் அருகே கப்பல்கள் செல்லும் வகையில் இரும்பிலான தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பாலம் வழியாக இந்திய போர்க்கப்பல் பயணம் மேற்கொண்டது. இதனைக் கண்டு ரசித்த வெளிநாடுவாழ் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூறுகையில், டவர் பாலம் வழியாக இந்தியக் கொடியுடன் போர்க்கப்பல் நுழைந்ததைக் கண்டு பெருமையடைந்ததாக தெரிவித்தனர். இந்த நிகழ்வு இங்கிலாந்தில் உள்ள இந்திய சமூகத்தின் கலாச்சார ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்ததாக குறிப்பிட்டனர்.