இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் முதலாவது போட்டி சம நிலை பெற்றதையடுத்து, இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 1- 0என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தது.
இந்நிலையில் கொழும்புவில் நடைபெற்ற கடைசி போட்டியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.