பாரீஸ் ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி, சீன அணியை எதிர்கொண்டு விளையாடியது. கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான இப்போட்டியில் தொடக்கம் முதலே சீனா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 0-3 என்ற கணக்கில் ஒரு வெற்றி கூட பெறாமல் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேற்றப்பட்டது.