கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் சோழன்திட்டை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் ஐயப்பனிடம் இருந்து 2 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர்.
இது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் 17 வயதான சிறுவன் மற்றும் கிராஸ் சாரதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதும் இவர்களுக்கு உதவியாக சதீஷ், முருகன், இந்து ராணி,நவீன் ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களை கைது செய்த போலீசார் சிறார்களை தவிர மற்ற அனைவரையும் சிறையிலடைத்தனர்.