கேரளாவில் முல்லைப்பெரியாற்று அணை உடைந்தால் என்ன ஆகும் என்பது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கேரள – தமிழகம் இடையே முல்லைப்பெரியாற்றில் அணை கட்டுவது தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில் முல்லைபெரியாற்று அணை உடைந்தால் என்ன நிகழும் என்பது குறித்து வீடியோவாக தயாரித்து அம்மாநிலத்தில் பரவப்பட்டு வருகிறது.
இதில் ஊருக்குள் தண்ணீர் புகுவதுபோலவும், மக்கள் அவதிப்படுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.