கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வட்டார போக்குவரத்து ஆய்வாளரை மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் பாடாய் படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேத்தியாத்தோப்பு பகுதியில் புவனகிரி- விருத்தாசலம் சாலையில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விமலா பணியில் இருந்துள்ளார்.
அப்போது ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி சென்ற நபரை மடக்கிப் பிடித்த போது மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது ஆவணங்களை விமலா பறிமுதல் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர், ஆவணங்களை கேட்டு வட்டார போக்குவரத்து ஆய்வாளரை பாடாய் படுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.