தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சுந்தர்ராஜபுரம் கிராமத்தில் வசித்துவரும் 12 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமியின் எதிர்வீட்டில் கூலிவேலை செய்துவரும் குருவையா என்ற முதியவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
விசாரணை நடத்திய போலீசார் குருவையாவை போக்சோவில் கைது செய்தனர்.