நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூறத்தாங்குடியில் அமைந்துள்ள சிவா விஷ்ணு கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மை வேண்டியும் 108 பெண்கள் விரதமிருந்து குத்துவிளக்கை அம்பாளாக பாவித்து வழிபாடு நடத்தினர். அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.