மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களும் கூடுதல் நிதியும் கிடைத்துள்ளதாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஸ்ரீமதி அபராஜிதா சாரங்கி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய நிதியமைச்சர் மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக ஆலோசித்து பட்ஜெட்டை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், பட்ஜெட் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய கூடாது எனவும் அபராஜிதா கேட்டுக்கொண்டார்.