மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், துணை முதல்வர் அஜித் பவார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜன் சம்மான் யாத்திரை என்ற பெயரில் நாசிக்கில் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அஜித் பவார், மகாயுதி கூட்டணிக்கு பொதுமக்கள் மீண்டும் ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.