மக்களவையில் திமுக எம்பி அருண் நேருவின் பேச்சுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலை பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாகவும், போதிய நிதி ஒதுக்கவில்லை என திமுக எம்பி அருண் நேரு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு மத்திய அரசு காரணம் அல்ல என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு திமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமல் உள்ளதே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தெரியாமலும், புரியாமலும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக அளவு விபத்து நடப்பதாக திமுகவினர் கூறுவது அறியாமையின் உச்சம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.