விஞ்ஞான் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பிரபல உயிரிவேதியியல் வல்லுநர் கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கும் ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்களுக்கு தேசிய அறிவியல் விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் நாட்டின் அறிவியல் துறையில் மிக உயரிய விருதான விஞ்ஞான் ரத்னா விருது, பிரபல உயிரிவேதியியல் வல்லுநர் கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, விருது அறிவிக்கப்பட்ட கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், பத்மநாபனின் ஆராய்ச்சிகள் கல்லீரல் நோய்கள் குறித்தும், மரபணு ஒழுங்குமுறை குறித்தும் ஆழமாக புரிதலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அறிவியல் சார்ந்த கல்வியின் முன்னேற்றத்தில் கோவிந்தராஜன் பத்மநாபன் முக்கிய பங்காற்றியுள்ளார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.